வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்!
கவித் தலைப்பு!
பூமிப் பந்தில் நானும்….

உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
எண்ணத் தகுமே எங்கே பெறுகிறோம்
மண்ணில் உள்ள மரத்தை செடிகளைக்
கண்ணால் உற்றுக் கனிவாய்ப் பார்ப்பின்
வானம் பொழியும் வாரி நீரும்
தானம் தானே தாங்கும் பூமி
மக்கள் வாழ்வில் மலைக்க வைக்குது
அக்கறை கொண்டே அருளும் செல்வம்
எத்தனை பேரின் ஏக்கம் தீர்க்கும்
அத்தனை பேரில் அடியேன் ஒருத்தி
இத்தனை நாளாய் இனிதே வாழ்ந்தேன்
உத்தமம் ஆகும் உணர்ந்திட வேண்டும்
சுத்தமும் பேணி சுற்றமும் வாழ
நித்தமும் நினைப்பேன் நிமலனை வேண்டுவேன்
பஞ்சம் பட்டினி பறந்திட வேண்டும்
எஞ்சும் மக்கள் ஏக்கம் கொண்ட
அஞ்சும் நிலையும் அகன்றிட வேண்டும்
நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி சொல்வேன்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக!
திரு.திருமதி நடா மோகனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக!
கவிப்படைப்பாளர்களுக்குப் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்!