சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு. ப.வை ஜெயபாலன் அவர்களே !
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
ஆடி மகளே ஆடியும்வா! (அறுசீர் விருத்தம்)

ஆடிப் பிறப்பு நாளினிலே
ஊரில் பெரிய கொண்டாட்டம்
கூடிக் கூழும் குடித்திடவே
குடும்பம் ஒன்றாய் இணைந்திடுமே
தேடி ஓடிச் சென்றிடுவர்
தெய்வத் துணையை வேண்டிடத்தான்
தேடி விதையும் விதைத்திடுவர்
தேசம் மகிழப் பகிர்ந்திடுவர்!

நெஞ்சம் எல்லாம் ஏக்கங்கள்
நிறைந்தே கிடக்கு உணர்வாயோ
பஞ்சம் இல்லா வாழ்வொன்று
பாரில் கொண்டு வந்திடுவாய்
நஞ்சை புஞ்சை நிலமெல்லாம்
நன்றே விளைச்சல் தந்திடவே
மிஞ்சும் நாட்கள் மகிழ்வுடனே
மிடிகள் அகன்று வாழ்ந்திடலாம்!

பட்டம் விடவே ஆடியிலே
பள்ளிச் சிறுவர் பெரியோரும்
கொட்டன் அடித்தே மகிழ்ந்திடுவர்
கொக்கன் பாம்பு பட்டங்கள்
வட்டம் போடும் வானத்தில்
வண்ண வண்ணக் கோலத்தில்
அட்ட திக்கும் ஆர்ப்பரிக்க
ஆடி மகளே

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.