உற்சாக வணக்கம்!
வியாழன் கவி!
மீளெழும் காலம்!
சொந்த நாட்டை இழந்தவன் அகதி என்றால்
நம்மில் எத்தனை பேர்
வந்த இடத்திலேயே வாழ்வை முடிக்க
வசதிகள் பெருக்க வழிகளைத்தேடி
உசர்ந்து கொண்டு உலாவரும் வேளை
உறவுகள் படும்பாடு உணர்ந்தோமா இல்லை
மறந்து போனோமா மண்ணை அகதிகள்
தினமாம் ஜ.நா தீர்மானம் எடுத்தது
கனவுகள் காணும் கல்லூரிப் பிள்ளைகள்
பெற்றோர்கள் எத்தனை பேர்கள் இன்னும்
அற்றார் பசியை அழிக்க உணர்கிறோமா
அகதிகளாய் அல்லல் அதிகமாய் உழல்கிறார்கள்
பகட்டு வாழ்வில் பச்சோந்தித் தலைவர்கள்
ஆண்டு கொண்டு அவ்வப்போ நடிக்கிறார்கள்
மீண்டெளும் காலம் மிளிர்வ தெப்போ?
சாண்ஏற முழம்சறுக்கும் சங்கடம் நிறைந்த
காண்கிறோம் அவலம் கண்கூடு எத்தனை
நாடுகளில் காண்கிறோம் நல்வாழ்வு காணப்
பாடுபடும் மக்கள் படுந்துயர் ஒன்றா இரண்டா
கொடியநோயும் வந்து கொன்று குவித்தது
கொடிய ஆட்சியில் கண்டோம் அகதிகள்
இயற்கையின் அழிவில் இழப்புகள் எத்தனை
இயற்கை இறைவனும் இரங்குவானா
கேள்வி
பயமைத வருவிக்க பக்தியுடன் இறையை வினவுகிறேன் மீண்டெளும் காலம் வருமா ?
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக! திரு திருமதி நடா மோகனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களையும் வாழ்த்தி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!