சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
இயற்கையே இன்பம்!
அன்னை போலே இயற்கை இருக்க
என்ன துன்பம் எதுவாய் இருப்பினும்
நின்று ரசிக்க நிதர்சனம் இயற்கையே
இறைவன் படைப்பில் இயற்கை நன்றே
குறைகள் இல்லை குவலயம் மகிழ
நிறைவாய்த் தந்தார் நிம்மதி உண்டே!
மலர்கள் அழகு மனத்தில் மகிழ்ச்சி
பலவகை இனங்கள் பாரினில் கண்டோம்
உலகமும் உவக்க உகந்தது இயற்கையே
மல்லிகை மலரும் மயக்கமும் தருமே சொல்லிட முடியா சுகந்திரம் வீசும்
நல்லதோர் மலரே நங்கைகள் அணியே
முல்லைக் கொடியும் முற்றம் படர்ந்து
எல்லை இல்லா இன்பம் தருமே
சொல்லிக் அடங்கா சொர்க்கம் அதுவே!
அருவியின் ஓசை அகத்தினை நிறைக்கும்
குருவிகள் கூடிக் குளிப்பதும் அழகே
தருக்களும் ஆங்கு தந்திடும் சுகமே
வியக்கும் வகையில் விரிந்தே இருக்கும்
பயக்கும் நன்மை பாரில் அதிகம்
இயற்கை சோலை இங்கிதம் ஆகுமே!

நன்றி வணக்கம்!