வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை !
கவித்தலைப்பு!
பாமுகம்!

புலத்திலே பூத்தது புதுமைகள் படைக்குது
பலவித நிகழ்வுகள் பெருமிதம் கொள்ளுது
எழுத்திலே முதலிது ஏற்றமும் கண்டது
பழுக்களும் சுமந்து பாரினில் உயருது
வழுக்களும் இன்றியே வழமையில்
நிகழ்வுகள்
அழுக்குகள் அற்ற இதயங்கள் இணையுது
தொழுதிடத் தக்கது தொண்டுகள் தொடருது
இழுத்திடும் வடத்தினை இளையவர் பற்றிட
பணிகளில் பற்றுடன் பணிப்பாளர் ஒன்றிடத்
அணிசேர் துணையாய் இல்லாள் இருந்திட
சொந்தமாய் உறவுகள் சோர்வின்றிப் பயணித்திட
பைந்தமிழ் மொழியும் பண்புடன் வளர்ந்திட
ஆண்டுகள் நிறைவாய் ஆளுமை வளருது
வாண்டுகள் பலரின் வல்லமை விளங்குது
பந்தலாய் விரிந்தது பாமுகம் பேரது
எந்தனின் கவிகளும் அரங்கமும் கண்டது
மகிழ்விலே திளைத்து மனத்தினை இணைத்து
பகிர்கிறேன் வாழ்த்துகள் பல்லாண்டு வாழிநீ!

கவிதை நேரத் தொகுப்பாளினிகளுக்கும்
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும்
மிகுந்த நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.