இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
இறைவா நீயும் இரக்கம் காட்டு!
இன்னல் இங்கே அதிகம் அதனால்
மின்னல் வேகம் மீட்பில் வேண்டும்
அன்னையாய் நீயும் அகிலம் காப்பாய்
நின்னைத் தொழுவோம் நித்தமும் நாங்கள்
ஆதி மூலனே அருள்தர வாவா
மேதினி எங்கும் மிடிகளால் நிறைந்து
கிடக்குது பாராய் கருணை பொழிவாய்
உடலும் உள்ளமும் உருகவே வேண்டி
உன்னை அழைக்கிறோம் உறுதுணை தருவாய்
சுகமது தந்து சுற்றமும் தழைத்திட
தகர்த்திடு துன்பம் தாரணி ஓங்க
நெறிமுறை தவறா நேர்வழி நின்று
அறிவுடன் ஆட்சியில் அரச தலைவர்
பொறுமை காத்து புரட்சியும் இன்றி
சிறுமைகள் நீங்கச்சீராய் ஆட்சியும்
நாட்டினில் நடக்க நல்லருள் செய்வாய்
வேட்டைகள் ஒழிந்து வேதனை இன்றி
மக்களின் துன்பம் மறைந்தே போகணும்
துக்கமும் தீர்ப்பாய் தூய பக்தி
கொண்டே தான்நாம் கேட்கிறோம்
மண்ணில் நடக்கும் மனிதம் அற்ற
கொடுமை ஒழியணும் குமுகம் சிரிக்கணும்
படுகின்ற வேதனை பாராய் இறைவா
ஒற்றுமை உணர்வுடன் ஒன்றே குலமென
பற்றுடன் உன்னைப் பற்றிக் கொண்டோம்
குறைவிலா துயிர்கள் கூடி மகிழ
இறைவா நீயும் இரக்கம் காட்டு!
நன்றி வணக்கம்!
ப.வை.அண்ணா பாரிய பணிக்கு மிகுந்த வாழ்த்துகள்!
திரு.நடா மோகன் அவர்களே மிகுந்த நன்றி!