சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே!
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
தொழிலாளி!
மனவலிமை கொண்டே மனையும் சிறக்கவே
கனத்த நெஞ்சுடனே கண்ணியமும் காத்து
வியர்வைத் துளிகள் வீழ்ந்து போக
உயர்வு நிலைக்கு உரமிடும் உழைப்பாளி
இயங்குவான் தன்வலிமை என்னும் எந்திரம்கொண்டே
பயன்பெறும் முதலாளி பணத்தில் குறிவைப்பான்
சுரண்டலும் இருக்கும் சூழ்ச்சியும் இருக்கும்
வரண்ட உடலோடு வாடிவதங்கும் தொழிலாளி
கரங்களைப் பார்க்க காய்ச்சே இருக்கும்
திரட்டவே ஆசை தினமும் ஆனாலும்
விரட்டுமே வறுமை விடியலும் எப்போ?
ஏக்கமும் கொண்டே ஏற்றம் காண
ஊக்கமுடன் உழைக்கும் உழைப்பாளி
காக்கும் கடவுளே!

பாரியபணி செய்யும் ப.வை.அண்ணா
மிகுந்த பாராட்டுகள்!
திரு.நடா மோகன் அவர்களே! மிகுந்த நன்றி !

நன்றி வணக்கம்!