வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் வணக்கம்!
வியாழன் கவிதை
கவித்தலைப்பு
ஒரு துளி நீர்!
துளி நீர் இல்லாது
விழிநீர் வழியும் காலம்
டழிசொல்வோம் இறைவா
ஏன் இந்தக் கொடுமை என்றே!
வாழ்வில் தொலைநோக்கு
தாழ்வில்லை உனக்கு
மழைநீர் சேகரித்து மண்வளம் பெருக்கிடலாம
மரங்களை நாட்டி வரமாய்ப் பெற்றிடலாம்
நதிகளை மறித்து நாசம் செய்யாது
விதியினை உணர்ந்தே விரைந்தே எழுந்து
மதியினை வென்று மகிழ்வாய் வாழ
வளரும் சமுதாயம் வளமோடு வாழ
பலமாய் இருந்தே பாலம் அமைப்பும்
வீண்விரயம் வேண்டாம் வான்மழையைப்
பேண்என்று சொல்லி பார்சிறக்கவாழ்!
துளிநீரும் அமுதம் தான்
தெளிந்த புத்தியோடு தரணியை ஆள்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகளுக்கு
நன்றி!
வாணி மோகன் அவர்களே உங்களுக்கும் மிக்க நன்றி!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.