வியாழன் கவிதை
உன்னதமே………உன்னதமாய்!
உன்னதமே உன்னதமே என்னதவம் செய்தோம்
இன்னல்கள் பட்டாலும் இல்லறம் நல்லறமாய்
பெண்மையின் சிகரமாய் பெரும்பேறு கண்டோம்
அடுக்களையில் அடங்காமல் அவனியிலே
அற்புதமாய்
துடுப்புகளாய் தூண்களாய் தாங்கியே நிற்கிறோம்
மடமையக் கொளுத்தி மகுடமும் சூடி
தடங்களும் பதித்து தாரகைகளாய் மிளிர்ந்து
தரணியை ஆளும் தரம்வரை உயர்ந்து
உரமாய் இருந்து உழைப்பதில் வல்லவர்
மகளிர் என்றால் மறுப்பது தகுமோ
பகலிரவாய் உழைக்கும் பகலவன் போலிருப்பர்
எட்டுமணி வேலைசெய்யும் ஆணின் துணையாய் இல்லத்தைக்
கட்டியெழுப்பக் கடவுளால் காரிகைகள் படைக்கப்பட்டார்
உன்னதமே உன்னதமே அனைத்துப் பெண்களும் உன்னதரே!
மருமகளாய் மறுவீடு சென்று மற்றுமொரு
அன்னையாக அண்ணியாகி
விருட்சமாய் நிற்கிறேன் வியக்கும்விதம் உன்னதமாய்!
நன்றி வணக்கம்!
கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி!