சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
முத்தமிழே நம்மின் மூச்சு!
இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகமும்
இணைந்ததுவே இன்பம் தானே
நயமுடனே பாக்களுமே புனைந்திடவே
நவரசமும் பொங்கும் ஆங்கு
வியக்கவைக்கும் நாட்டியமும் சான்றுதானே
விண்ணவரும் புகழ்ந்து பாட
பயபக்தி கொண்டேதான் பாரினிலே
பைந்தமிழைச் சொத்தாய்க் காப்போம்!
முத்தமிழை முகவரியாய்த் தரித்திடுவோம்
முதுமொழியாய் முகிழ்த்து பாரில்
நித்தியமாய் வாழ்ந்திடுதே நித்திலத்தில்
நிதர்சனம்தான் கண்டோம் வாழ்வில்
சத்தெனவே உட்கொள்வோம் சரித்திரத்தை
சந்ததியும் அறிந்து கொள்ள
முத்திரைதான் பதித்திடுவோம் முழங்கிடுவோம்
முத்தமிழே எங்கள் மூச்சு!

ப.வை.அண்ணா! உங்கள் பாரியபணிக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே!
மிகுந்த நன்றி உங்களுக்கு!
களம் தந்து வளப்படுத்தும் பணி
போற்றத்தக்கது.
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்
ஜெர்மனியிலிருந்து
சக்தி சிறினிசங்கர்