சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிதீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
அலையோசை
*****************
தொடக்கம் இல்லை தடங்கல் இல்லை
கடலை ஓய்வு கண்டதும் இல்லை
நாற்புறம் கடல் நல்லதோர் தீவு
காற்று வாங்க கரையில் குந்தி
ரசித்து மகிழ ரத்தினத் தீவு
அசைந்து வரும் அலையின்ஓசை
கடலின் இசையே கனிந்த நாதம்
கடந்து செவிவழி செல்லும்
துள்ளித் துள்ளிப் பாய்ந்து நுரை
தள்ளிச் செல்லும் தன்மை என்னே
அழகு அலைக்கு அந்தம் இல்லை
இழுக்கும் தன்வசம் இதயம் இளகும்
நிலைகுலையவும் வைக்கும் நிர்க்கதி ஆக்கும்
வலைவீசும் மீனவர் வயிற்றிலும் அடிக்கும்
அலைகடல் தேடி ஆதாரம் நாடி
விலைபேசி விற்றுப் பிழைக்கும் வறியவர்
வாழ்வில் அலைஓசை வசந்தமாய் வந்தால்
பாழ்இல்லை பாடுபட்டு உழைக்கும் பாட்டாளி
வர்க்கம் உயர்ந்த வாழ்வைச் சுகிக்க
சொர்க்கம் ஆகும் சொந்த சுமைகளை
இறக்கி வைக்க இரைச்சல் இல்லா
திரைகடல் ஓடித் திரவியம் தேடுவர்

இயற்கை கடல்அன்னை
இன்னிசை தருவாள்
மயங்க வைப்பாள் மனத்தினை நிறைப்பாள்!

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி!
மிகுந்த வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!