சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்தி சிறீனி சங்கர்

இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வலைப்பூ
***********
உலகம் சுருங்கி
உள்ளங்கைப் பிடியில்
விஞ்ஞான எழுச்சியால்
வியப்புறச் செய்யவே
இன்டர்நெட் என்னும் இணையம்
தெரிந்தோர் தெரியாதோர்
பழகியோர் பழக்கமில்லாதோர்
அண்டை அயலவர்
அனைவரையும் இணைத்த உறவுப்பாலம்
ஒலி ஒளி வடிவக் கோப்புகள்
ஓவியம் படங்கள் மூலம்
உலகம் பயன்பெற உதித்தது வலைப்பூ
வரமாய் வந்தது வலைப்பூ
சரமாய்த் தொடுப்பர்
கவிதை கட்டுரை!
தமிழ் இலக்கிய வளர்ச்சியில்
தரணி உயர்ந்திருக்க
தரமான வலைப்பூக்கள்
தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி
வலைப்பூவின் வலுவில்
வளமான சமுதாயம்
உருவாகட்டும்!

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து ஊக்கப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தைக்கையாளும் வாணி மோகனின் பணி போற்றுதற்குரியது.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.