சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

விழிப்பு வந்திட்டால்
சலிப்பு மறைந்திடும்
முழிப்பை மாற்றியே
செழிப்பை பெருக்கிடும்

விழிப்பின் வலிமையை
விளங்கிடும் வகையினில்
வளரும் தலைமுறையை
வளர்த்திட வேண்டும்

விழிப்பில் தொடங்கும்
வளமான பொழுதுகள்
பொலிப்புடன் நாளினைக்
கழித்திடும் வழியது

விழிப்பின் எல்லைகளை
வகுப்பவர் யாரிங்கு
அழிப்பின் ஆற்றலை
அகற்றிடும் வேளைகள்

விழிப்பினை இழந்ததால்
வலித்தவன் சொல்கிறேன்
விழிப்பினை மறந்தால்
வாழ்க்கையில் வலிகளே !

விழிப்புடன் செயலாற்றுங்கள்
வாழ்க்கையில் என்றுமே
செழித்திடும் வாழ்க்கையே !
செந்தமிழ்ச் சொந்தங்களே

சக்தி சக்திதாசன்