சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

“நிலையாத நிலை. “சுற்றுதிந்த அகிலமே
சுழல்கிறோம் அறியாமல்
நிலைக்குமெனும் நினைவில்
நாளையென்று ஏதுமில்லை
நேற்றைகள் நிற்பதில்லை
இன்றையை மறந்துவிட்டு
இதயமெல்லாம் ஏக்கத்தொடு

இரவென்று ஒன்றிருந்தால்
விடியலங்கு நிச்சயமே
வாழ்வென்று ஒன்றிருந்தால்
இன்பதுன்பம் இயற்கைதானே !

மரணத்தின் வாசலை
மரணித்தோர் சொல்வதில்லை
இதயத்தின் கதவுகளை
இருப்போரும் அறிவதில்லை

மகிழ்வென்னும் சாவிதனை
மறந்தெங்கோ வைத்துவிட்டு
எங்கெங்கோ தேடுகின்ற
பரிதாப நிலையிண்டு

விதைத்தது நெல்லென்றால்
அறுப்பதும் நெல்தானே
களைகளை விதைத்துவிட்டு
கதிர்தேடிக் கதறுகின்றோம்

உள்ளத்தின் உள்ளேயே
உறைந்திருக்கும் ஆன்மபலன்
உறுதியாய் அதைத்தேடும்
வழிகண்டால் அமைதியுண்டு