சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

தொட்டு விடும் தூரத்தில்
சுட்டு விடும் வெய்யில்
பட்டு விடும் போதங்கு
விட்டு விடும் குளிரும்

எட்டி விடும் தொலைவில்
பட்டு விடும் காட்சிகள்
தட்டி விடும் தருணம்
ஒட்டி விடும் மனதில்

கட்டி விடும் உள்ளத்தை
முட்டி விடும் பார்வைகள்
மீட்டி விடும் இசையில்
போட்டி இடும் ராகங்கள்

சூட்டி விடும் புகழில்
காட்டி விடும் திறமை
நீட்டி விடும் போதங்கு
நாட்டி விடும் பெருமை

பூட்டி விடும் உணர்வுகள்
தீட்டி விடும் கூர்மைகள்
சுட்டி விடும் திசையிலங்கு
கெட்டி விடும் வேகங்கள்

சக்தி சக்திதாசன்