பூரணமாய் ஜொலித்தது
பெளர்ணமி நிலவது
சின்னதாய் ஒரு நிழல்
சித்திரமாய் அதனுள்ளே
களங்கமென்றான் கவிஞனொருவன்
கறையென்றான் அடுத்தொருவன்
நிர்மலமான நீல வானவீதியில்
நிறைந்து பாயும் ஒளிபாய்ச்சி
மெளனமாய்ப் பவனி வரும்
மெல்லினிய நிலவோ தானே
மெதுவாய்ச் சிரித்துக் கொண்டது
மெத்தப் படித்தவர் ஞானம் கண்டு