காற்றோடு கரைந்து செல்ல
பனியல்ல வறுமை
நேற்றோடு மறைந்து போகும்
நினைவல்ல பசிக்கொடுமை
கைகளின் தழும்பு சொல்லும்
கண்ணீர்க் கதைகளவை
காயம் பட்ட பாதங்களின்
காரணத்தின் நிகழ்வுகள்
ஏர் பிடித்து நாளெல்லாம்
நாய் பட்ட பாடு பட்டு
சோறின்றி வாடிடும் உள்ளங்கள்
தூங்காத இரவுகள் காணீர்
பாதையோரப் படுக்கைகள்
பகிர்ந்திடும் பல கதைகள்
சோரம் போன பெண்கள்
சோகம் சொல்லும் நேரங்கள்
விடிவொன்று இனி உண்டா ?
வினாவுடன் விடியல்கள்
விழித்திடு என் தோழா
விரைந்து வா பதிலுடன்
சக்தி சக்திதாசன