சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

கண்களின் முன்னால் விரிந்திடும்
காட்சியின் மகிமை கண்டே
கவிதை வரிகள் குதித்திடும்
கணத்தில் வரிகளாய் பதிந்திடும்

வீசிடும் கதிர்களால் என்னை
விரைந்தே அணைத்திடும் ஆதவன்
மூடிடும் இருளால் பகலைப் போர்த்திடும்
மாலை எனைப் பலமாய் ஈர்த்திடும்

கூவிடும் குரலால் இன்னிசை இசைத்திடும்
குயிலதன் ஓசைகள் ஒலித்திடும்
ஆனந்த லகரிகள் தன்னில் நானும்
ஆழ்ந்திடும் பொழுதுகள் இனிப்பே !

தேடிடும் வாழ்வில் கண்டிடும் மகிழ்ச்சி
தேடாமல் கிடைத்திடும் வேளை
இயற்கையில் நிறைந்திடும் காட்சிகள்
இரந்திடும் வேளைகள் தானென்பேன்