இயற்கை————தவழ்ந்தோடும் மேகங்கள்
நீலவான முன்றலில்
கலைந்தோடிக் கரைவதும்
மீண்டும் இணைவதும்
வெண்முகிலின் சிரிப்பிலே
சீறுமாதவன் ஒளிக்கீற்று
கருமுகில்களின் அழுகையில்
மழைச்சாரலாய்ப் பொழிவதும்
இயற்கை நியதிகள்
எழுதப்படாத விதிகளே !
காலைமுதல் மாலைவரை
பறந்தோடும் பறவைகள்
மாலைநேர மயக்குபொழுதில்
மதுரமாகப் பேசிடும் மொழிகள்
கேட்கக்கேட்க இனிக்குது
தேன்சுவையாய்ப் பொழியுது
மானிடராய்ப் பிறந்தும்
மனிதத்தைமறந்தோம்
சுயத்தினை தேடும்
சுகத்தினை அறிவோம்
எமக்குள் உறைந்திடும்
எளிமையில் வதியும்
ஏற்றமிகு ஆன்மாவை
ஏற்றிடுவோம் இறைவனாக
மாறிடும் உலகத்தில்
மாற்றமே மாறாதது
மாற்றத்தின் வடிவமாய்
மாறாமல் ஆன்மாவே
அனைத்தும் ஒன்றாய்
அனைவரும் சமமென
அறிவினை உணர்ந்திட
ஆன்மாவை அறிந்திடு
எமக்குள் மூழ்கிடுவோம்
எம்மைத் தேடிடுவோம்
எல்லாம் எமக்குள்ளே
என்பதைப் புரிந்திடுவோம்
சக்தி சக்திதாசன்