வியாழன் கவி
ஆக்கம் 104
வாழ்ந்தோரை போற்றுவோம்
மதி கொண்டு
வரைந்த
விதி சொன்ன
பாதை
நிலை இன்று
விதி மாறி
தடை போகின்ற
வேளை
ஒரு வார்த்தை
பிழைத்தின்று
மறு வார்த்தையாக
மாறி
சுடு வார்த்தை
பரிமாறி
மனம் கொதிக்கின்ற
போது. !
நிதம் உண்மை
வெல்லும் என்று
நீறு பூத்து
நின்று!
கடல் வானம்
மறைகின்ற
கதிரவன் போல
இன்று!
க.குமரன்
யேர்மனி