சந்தம் சிந்தும்
வாரம் 248
வசந்தத்தில் ஓர் நாள்
வசந்த நாளிலே
சுற்றுலா சுற்ற
சுதந்திர பறவைகளாக
பஸ் வண்டிலே பயணம்
பாடலும் ஆடலும் கூட
தாள சந்தம் போட
கூக்குரலும் கும்மாளத்தோடு
குதூகல பயணம்
அழகிய மலைகள்
அதனிடையே புகாரும்
மன்னனின் கொட்டையிலே
மறைந்திட்ட நினைவுகள்
உண்டிட்ட சுவைகள்
ஒருமித்த அமர்வுகள
எளிமையில் இனிமை
என்றுமே இதயத்தின்
வசந்தங்கள்
க.குமரன்
யேர்மன