வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 97
நவராத்திரி

வாணி உந்தன்
வீணை யேன
நானும் உந்தன்
மடியில் தங்குவேனோ !

மீட்டும் விரலின்
ஓசை நயம்
கேட்கும் சந்த
ஜதியின் சுரம்

காட்டும் அந்த
கலையின் வரம்
மாற்றும் எந்தன்
மனதின் லயம்

ஏங்கும் எனது
கலை தாகம்
ஏகமாக அரங்கேற
கலை வாணியே!
உந்தன் வரம்
வேண்டி!

க.குமரன்
யேர்மனி