சந்தம் சிந்தும்
வாரம்193
உள்ளே போங்கோ!
ஏறுங்கோ! ஏறுங்கோ!
பின்னாலே நிரைய இடம் இருக்கு
கொஞ்சம் தள்ளி போங்களேன்
எல்லோரும் ஊர் போகவேணும்
கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவேன்!
ஆச்சி தம்பி தங்கச்சி
பஸ் போற பக்கமகா திரும்பி
நிற்க வேணும்
வலபக்க நிற்க்கிறவை
வலபக்கமாக் நில்லுங்கோ
இடபக்கமாக நிற்கிறவை
இடப்பக்கமாக நில்லுங்கோ!
தங்கச்சிகள் எல்லாரும்
நடுவாலே பூந்து போவீனம்
போங்கோ! போங்கோ!போல்கோ!
பாக்கை இருக்கிறவை
மடியிலே வையுங்கோ!
மாற்றின காசு
இல்லேங்கோ!
உங்கடசில்லறையை
அடுத்த முறையும்
நீங்கள் ஏறும் போது
ஞாபமாக தருவேன்கோ!
ஐயோ! எண்டை கால்
எண்டை கால்
காலை மிதியாதேங்கோ!!
இறக்கம் இறக்கம்
கொஞ்சம் விடுங்கோ!
கை குழந்தை அக்காவுக்கு
இடம் கொடுங்கோ!
யாழ்ப்பாணம் வந்திட்டுது!
எல்லோரும்
மாத்தின காசா தாங்கோ!!
க.குமரன்
யேர்மனி