வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 95

தேடும் விழிக்குள் தேங்கியவலி

தேடும் விழிக்குள் தேங்கியவலிக்கு
மருந்திட்டு மாறிடுமா?
மாத்து கழிப்பு செய்து
போக்கிடலாமா?

ஆண்டாடு காலமாக
தேக்கி வைத்த
ஆதங்கத்தை ஆராத
மன கொதிப்பை

விழி சிந்தும் கண்ணீர்
மொழி இன்றி
கூறும் வலியை
பலம் இன்றி
பல நாளயாய்

பயந்து மனம்
பாடுபடும்
ஏக்கத்தை ஆற்ற வழியின்றி
தேக்கி நிற்கும்
தேடும் விழிகள்
கூறு கதையை

காலங்கள் கூறிடுமா?
காரணங்களைக் தேடி!!!

க.குமரன்
யேர்மனி