வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 115

பொசுக்கிய. தீயும் பூத்திட்ட பொலிவும்”

கால் பதித்த மண்ணில்
கரைந்திட்ட நினைவுகள்
பொசுக்கிய தீயில்
பொசுங்கிய புத்தகங்கள்

அறிவை அழித்திட
ஆற்றிட்ட சதி
ஆறுதல் தருவது
புதிய கட்டிடங்களே!

மீண்டிட்ட அறிவு கூடத்தில்
அறிவை பெற்றிட
அளந்த அளவிலேயே
அறிவுப் புத்தகங்கள்!

மீண்டிடாத மீள்பதிப்புகள்
மிகுந்த மனவலிகள்
பூத்திடாத பொலிவுகளே
விகுதிகள்!!

நேரில் பார்த்தவை!
பூத்திட்ட பொலிவா??
எங்கே????…..

க.குமரன்
யேர்மனி