சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 7.3.23

சந்தம் சிந்தும்
வாரம் —213

நாதம்
வீணை செய்யும்
நாதம்
காது வழியோரம்
போகும் வழி நேரம்
ஒசை தரும்
கீதம்
ஓராயிரம் கவி
பேசும்

நோய்க்கு மருந்தாகும்
துன்பம் போகும் வழி
போகும்

சேய்க்கும் தாய்க்கும்
சிந்து பாடும்
வாக்கு மனம்
ஒன்றி
கேட்கும் நாதம்
கோடி
ஏற்கும் என் மனம்
என்றும்
அந்த வீணை செய்யும்
நாத த்தை !

க.குமரன்
யேர்மனி