சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 181
உன்னில் நான்

உன் வரவுக்குகாய்
காத்திருந்த காலம்போய்
என் வரவுக்குகாய்
காத்திருக்கின்றாய் நீ!

என்னை உன்னில் பார்த்தேன்
இனி உன்னை என்னில் பார்ப்பாய்
ஆசை எல்லாம் நீயாய் இருந்தாய்
இனி உன் ஆசை எல்லாம் நானாவேன்!

போகும் நாட்களில் நீ வளர்ந்து
பூ வாய் அழகு தந்தாய்
வரும் நாட்களில் நான் வளர்ந்து
நீ தாயாவாய்!

அழகியே உனக்கு அழகு சேர்க்க
இன்று உனக்கு வளகாப்பு
ஆசிர்வதிக்கின்றேன் அப்பாவாக
உன் அகத்தனில் நின்று!

க.குமரன்
யேர்மனி