வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 90

அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள்

குறுகிய மனம்
கூறுகின்ற விதம்
எரித்திட்ட பதிப்பினால்
எங்கும் அறித்திட்ட விதம்

மதியைக் குறைக்க
மதிப்பிட்ட அளவுகோல்
அவர்கள் மதியை
அறிந்திடும் அளவு கோல்

அனல்தனல் வெக்கையில்
ஆறிட்ட குளிர் காய்தல
ஆளுக்கோர் சிலின்டரோடு
அலைகின்றான்
நெருப்புக்காய் நீ்ள் வருசையில்
இன்று !

க.குமரன்
யேர்மனி