வியாழன்
ஆக்கம்-108
தனிமை
பத்து நாட்
சிசுவின்
பரிதாப
தனிமை
ஆதரித்த
இரு கரங்கள்
அரவனைத்து
காப்பகத்தில்
தஞ்சமிட வைத்தது
நேற்றும்
இன்றும்
பொழியும்
மழைக்கு
தளைக்கும்
பயிர்போல்
நீ தளைத்து
ஆல் போல
மாந்தருக்கு
கரம் கொடுப்பாய்
நிதர்சனத்தை
சந்திக்கும்
நித்திலமே !!
க.குமரன்
யேர்மனி