சந்தம் சிந்தும்
வாரம் 176
இதுவா தீர்வு
பிரதமர் மாற்றம்
மந்திரி மாற்றம்
மாற்றம் தருமா?
மாநிலத்தில் ஏற்றம்!
ஏற்றம் காண
இன்னும் அடிப்போம்
பச்சை மையில்
பண நோட்டும்
ஊதியம் கொடுக்க
ஒரு வழி தீர்வாம்
காரியம் இங்கே
தப்பாய் போகுதாம்!
வீழ்ச்சியின் பெறுமதி
பண வீக்கமாகுதாம்
விலைகளின் உச்சத்தால்
வீதியில் சங்கம ம்
காரணம் எதுவேன
தெரியா அரசிடம்
காரியம் ஆவது
தர்ம சங்கடம்!!
க.குமரன்
யேர்மனி