வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 89

கோபம் கொண்ட கோமளம்

அம்மனுக்கு
பட்டுத்தி
பார்க்க
கோமளத்திற்கு
ஆசை

சோமர்
கடையில
பட்டுசேலை
வாங்கபோக
50 யூரோ
விலை
என்றதை
கேட்டு
விக்கித்தாள்

அங்குசபாணமாக
வாட்செப்பைக்
காட்டி

என் நண்பி
சேலை படத்தோடு
குரல் பதிவோடு
விலை
30 யூரோ
என்றாளே!

விக்கித்த சோமர்
அவள்
வாடிக்கைகாரி
அதனால்
விலை அப்படி

ஆளுக்கு
ஆள்
விலை
மாற்றம்

அயோகியதனம்
என்றாள்
கோமளம்

அம்மன்
கோவம்
போல்லாது
30 யூரோக்கே
தாரும்
என்றாள்

பட்டுசேலை
அம்மனுக்கு
சாத்தி பார்க்க
பக்கத்து
அம்புஜங்கள்
புன்னகை
பூக்க

அலட்ச்சிய
பார்வை
பார்த்தாள்
கோமளம்

க.குமரன்
யேர்மனி