சந்தம் சிந்தும்
வாரம் 172
மது
சுவைத்திட
முடியாத
சுவை
சுவைக்க
சுவைக்க
வைத்திடும்
வலை
மறுத்திட
எண்ணும்
மறுபடி
எண்ணும்
மயங்கிட
வைத்திடும்
மந்திர
மாயவலை!
குவளையில்
இறங்கி
குடும்பத்திற்குள்
குடி கொள்ளும்
கோல மகன்
கொள்ளும்
கோலம்
குவளைக்குள்
குடியாளும்
க.குமரன்
யேர்மனி