வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன். கவி
ஆக்கம். 87

சித்திரை மகளே

சித்திரை மகளே
சீற்றம் ஏனே!
இத்தரை மேலே
கோபம் தானோ!

உனதான மக்கள்
உயிர் சேதமின்றி
உய்க்க செய்ய
ஒரு வழி காணதும் ஏனோ?

நோய் கொண்டு
மாய்ந்தவர்
எண்ணியடங்கா
எண்ணிக்கையானதே!

எதிர் யுத்தம்
எங்கு பரவ
எச்சரிக்கை
காட்டிடுதே!

பசி பஞ்சம்
பட்டினிகள்
பாரினிலே
பாராமுகமாய்
நிற்கின்றாயே!!!

க.குமரன்
யேர்மனி