வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 86

வள்ளுவக் கோலம்

வள்ளுவக் கோலம்
வட்டமிட்ட மெழுகு வர்த்திகள்
வாசலுக்கும் கழிப்பறைக்கும்
மத்தியிலே !!!

என்னே உயரிய
கனம் பண்ணல்
ஒவ்வொரு பாத
மிதிப்புக்கும்
ஓடி வந்து ஏச்சுகள்
காவல் காக்கும்
மடமைகள்

உன்னத்த்தை. உயரத்தில்
வைத்திருந்தால்
உளக்குகளுக்கு.
தப்பி இருப்பார்
வள்ளுவர்!

உன் பிழைக்கு
மற்றவர்கள்
குற்ற வாளியா?

இக் கோலம் கண்டு
நியாயம் கேட்க
வந்ததே இந்த
வள்ளுவக் கோலம். !!!

க.குமரன்
யேர்மனி