வியாழன் கவி
ஆக்கம் 81
விடியலி்ன் உன்னதம்
கலங்கின கண்களில்
ஆனந்த கண்ணீர்
காணமல் போனவர்கள்
விடுதலை பெற்றனர்
ஏங்கிய மனைவியும்
ஏங்கிய தாயும்
ஏங்கிய தந்தையும்
ஏங்கிய உறவுகளும்
உறவு கொண்டாடின
காணிகள் மீட்கபட்டன
கேட்டவை கிடைக்க பெற்றன
ஆனந்த ஈழத்தில்
அது அன்றோ
விடியலின் உன்னதம்
க.குமரன்
யேர்மனி