வியாழன் கவிதை

க.குமரன் 4.5.23

வியாழன் கவி
ஆக்கம். 112

மந்தி

தொப்பி வித்த
மந்தி கதை
கேட்ட துண்டு
குரங்கு வித்த
கதை கேட்ட
துண்டா ?

ராமர் விடு தூது
மறந்து போய்
சீனா வியாபாரமாகி. போச்சு
விசா இல்லாமல்
விசிட்டிங் சீனா!

ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததி
பெருகி போனதாலே
சோதனைப் பொருள்
ஆவுது

மாதிரி மனிதர்களை
மதிப்பற்ற பொருளாக்குது
கானகத்து செல்வம்
கவளைக்கு இடமாகுது. !

மறுத்து போராட
யாரும் இல்லை
துனைக்கு வாதாட
ராமரும் இல்லை
வைக்கீலும் இல்லையே!

க.குமரன்
யேர்மனி