சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 238

மீண்டு எழு
அச்சம் என்பது
உனது சொத்து!
நித்தம் இந்த
வட்டச் சுழச்சி

கட்டம் போட்ட
கோட்டை விட்டு
திட்டம் போட்டு
வெளியில் வந்தால்

எல்லை அற்ற
உலகம் கண்டு
கொள்ளை இன்பம்
கொள்வாய் நீயும்

நம்பிக்கை பூண்டு
தும்பிக்கை துனையோடு
வேலிகளை தகர்த்து!
மீண்டு எழுவாய்
நீயும்!

க.குமரன்
யேர்மனி