சந்தம் சிந்தும்
வாரம் 205. 3,01.23
தை மகளே
தை மகளே
செய்வது தான் யாது?
வினா ஒன்று தொடுத்தால்
விடை என்ன தருவாய்?
வளரும் நாட்களில்
வருவது தான் என்ன?
போர்களங்கள் புண்ணிய
பூமி ஆகுமா!
வாட்டிடும் நோய்கள்
மங்களம் தான் பாடுமா?
இயற்கையின் சீற்றம்
தென்றலாய் மாறுமா?
ஏங்கிடும் ஏக்கங்கள்
எண்ணம் போல் மாறுமா?
கண்ணீர்கள் பன்னீராய்
மாறுமா?
தடைகற்கள்
வெண்பனிபோல உருகுமா?
வாஞ்சை தரும் நாட்கள்
வசந்தத்தை தேடிட
வரவேற்கின்றேன்
உன்னை மகளே !
க.குமரன்
யேர்மனி