சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 236

குழல் ஓசை

குழலோசைதனைக் கேட்டு
மனமொன்று மாறும்
அவைதனில் அமைதியில்
அரங்கேறும் நாளில்
நிதம் உன்னை வருடும்
காற்று
நித்திரையாக்கும்
செவியில் கேட்டு
அவைதனில் கரகோசம்
ஆன்றோர் போற்றும்
புகழாரம்

தெருவோர
குழலோசை
மின்னும் ஓளியில்
மிளிரும் ஓசை
சன்னக் குரலில்
சங்கடங்கள். பேசி
மிச்சம் மீதி
இறைப்பாய்க் கூறி
கண்ணன் குழலில்
கவியோன்று பாடி
காணாது இருப்பார்
கடந்து போகும் நாளில்
ஏற்றமும் இறக்கமும்
இசையில் இங்கு இல்லை!
கேட்பவர் மனதில்
மாற்றங்களின் தொல்லை!!..

க.குமரன்
யேர்மனி