சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம். 235

விருப்ப தலைப்பு
வலை

வலை விரியும் கோலம்
மன கிளர்ச்சியின் தாபம்
இன்னும் இன்னமும்
சென்றிடும் நேரங்கள்

ஸ்பரிசங்களின் பரிவர்த்தனைகள்
பகிர்திடாத சம்பாஷனைகள்
மௌனங்களில் கடக்கும்
உரைந்திடும். பொழுதுகள்

ஏறிடும் அழுத்தங்கள்
ஏற்றிடும் சொகுசுகள்
வாட்டிடும் நோய்கள்
வாங்கிடும் மாத்திரைகள்

வலை விரிக்கும் பின்னகளில்
இருள் மறைக்கும் பார்வைகள்
அழகான கண்ணாடி வில்லைகள்
அமர்ந்திடும் நாசிகளில்

அனர்த்தங்களின் பயணங்கள்
அவசியமாகும் வாழ்க்கையிலே!
சூமுகளில் நின்று
சூழ் உரைப்போம்
வாழ்வினை வென்றிட

க.குமரன்
யேர்மனி