சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 24.1.23

சந்தம் சிந்தும்
வாரம்—207

சிலுவை நாட்களை யோசி

அந்த. திகதிகள்
மறுமடி மறுமடி
வருவது தான்
ஏனோ?

மறந்திட எண்ணும்
மறுபடி எண்ணும்
நினைவுகளில் சுமந்து
மௌனத்தில் கரைக்கிறது

இறுதி பேச்சு
இறுதி பார்வை
இறுதி ஸ்பரிசம்
உறைந்திட்ட சுமைகள்

மீண்டும் மணக்கோலம்
வெள்ளை செவ்வகத்தில்
மலர்வளை அலங்கார
பிரியாவிடை

விழி. சிந்தும்
கண்ணீருக்கு
வழி எங்கும்
இருள் மூட்டம் !!

க.குமரன்
யேர்மனி