வியாழன் கவிதை

க.குமரன் 23.3.23

வியாழன் கவி
ஆக்கம்-106

வாழ்வோரை போற்றுவோம்

காட்டுக்குள் மறைந்து
வாழ்ந்த முன்நாள்
போராளி
தலைப்பு செய்திகளில்

ஏன் இந்த நிலை
ஏன் போராளியானான்?

எல்லோரையும் போல பிறந்தவன்
தமிழ் விடுதலைக்காக
தியாக சிந்தனையுடன்
போராடி
காட்டு பழங்களையுண்டு
கலங்கிய மன நிலையில்

மீட்டவர்கள் அரசியல்
நடத்துவார்களா ?
மீண்டவருக்கு
மறுவாழ்வு தானும்
கிடைக்குமா?….

க.குமரன்
யேர்மனி