சந்தம் சிந்தும்
வாரம் 210
ஊக்கி
ஒளி கொண்ட
விளக்கு
ஒளி துண்ட
ஒரு ஊக்கி
மதி கொண்ட
சிறாருக்கு
அறிவூட்ட
குரு ஊக்கி
நரி கொண்ட
குணத்திற்கு
தடை கொண்ட
சட்டங்கள் ஊக்கி
எதிர் கொள்ளும்
வாழ்வில்
முறை கொண்டு
வாழ்ந்திட
அன்பர்கள் ஊக்கி
அனுபவ முதிர்வு
கொண்ட
மா மானிட
நம்பிக்கை
ஊக்கிகள் !!!
க.குமரன்
ஜெர்மனி