வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம். 121

ஆண்மை

உதை பந்தாடும்
பாவையிவள்
உருவத்தில் உறுதி
கொண்ட காளையிவள்

வலிமை கொண்ட
கால்களால்
உதைத்து பந்தை
ஓட்டுபவள்!

மனமும் உடலும்
கொண்ட உறுதியில்
உடலும் உள்ளமும்
மாறியவள்!

பெண்மையை விஞ்சிய
ஆண்மையை
வன்மை கொண்டு
பேசும் மானிடம்!

ஆண் சுரப்பிகளின்
மேம் பாட்டால்
அங்கீகாரம் மற்ற
பெண்ணிவள்!!…….

க.குமரன்
யேர்மனி