சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 201

கனவு மெய்பட வேண்டுமே

தேம்பிடும் இரவுகள்
தெம்மாங்கு பாடிட
ஏங்கிய பொழுதுகள்
ஏற்பதனை தேடிட

வாழ்வதன் சூத்திரம்
வகையாக வந்திட
காத்திடும் தெய்வமும்
கருனை தந்திட

மாற்றார் பார்வையில்
மாற்றமும் காணிட
மங்கையின் கையிலும்
வளையல்கள் குளுங்கிட

உறவுக்கு பாலமாய்
தொட்டிலும். ஆடுமே!
உன் கனவும்
மெய்திட வேண்டுமே!

க.குமரன்
யேர்மனி