வியாழன் கவிதை

க.குமரன். 2.3.23

வியாழன் கவி
ஆக்கம் 103

நிமிர்வின் சுவடுகள்

ஆறு கால பூஜை நடந்த
ஐயனார் கோயில்
வயல் வெளியில்
நிமிர்ந்து நின்ற. கோயில்

நெல் விளைச்சலில்
ஒரு பங்கு
அர்ச்சகர் குடும்பத்திற்கு
என்று ஆதரித்த
மக்கள்

இன்று என் காணி
எனக்கு சொந்தமில்லையாம்!
கள்ள உறுதியில்
நன்கொடை பெற்றதாக
சில பெயர்கள் !

முதிசம் என் என்பதை
நான் உறுதி செய்ய
வேண்டுமாம்!

மறைந்திருக்கும்
ஐயனாரே!
மர்மத்தை துலக்குவாயா?
நூறு ஆண்டுகளை
கடந்தும்
நிமிர்ந்து நிற்கும்
சுவடுகளாக
நீ!

க.குமரன்
யேர்மனி