சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 17.1.23

ஞசந்தம் சிந்தும்
வாரம் 206

புதிர்
இளமையின் இரகசியம்
பேசும்
கதைப்பதில் விரைவினைக்
கூறும்
பொழுதினைப் வரவேற்று
பாடும்
போகும் வழிதனில்
கூடியே
ஒருமைப் பாட்டைக்
காட்டும்
ஆறாம் நாளில்
அவனுக்கு என்று
ஒரு தனிக்
கௌரவம்
பார்வையின் சீர்கேட்டை
பௌடியாக க் கூறும்
மறை பொருளின்
திரைப் புதிரினின்
கருப் பொருளைக்
கூறுங்களேன் ?

க.குமரன்
யேர்மனி