வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 119

ஆசை
ஆசைக்கு அளவு ஏது?
ஆசை எப்பொது வரும்
விருப்பங்கள் வளர்ச்சி பெறும்
எல்லைகளும் தளர்ச்சி பெறும்

ஆழியில் தாண்ட கப்பல்
நூறு ஆண்டுகள் ஆனாலும்
அதில் உண்டான காதல்
இன்று வரை நீட்ச்சி பெறுகிறதே!

கோடி பணம் கொடுத்து
நீர் மூழ்கிக் கப்பலில்
நீரில் மூழ்கி
காவியக் கப்பல் பார்க்க

நீரின் அமுக்கம் தாழது
காவு கொண்ட கதை
வேதனைக் கதையை
வேவு பார்க்க போய்

வேதனைக் கதையானதே!
அளவு பெற்ற ஆசை
ஆனந்த வாழ்வு தருமே!

க.குமரன்
யேர்மனி