வியாழன் கவி
ஆக்கம் 118
“அகதி” நாம் பெற்ற வரமா?
அகதி
அர்த்தம் புரியமலேயே
அகன்று வந்த
ஐரோப்பா!
நாட்டில் பிரச்சனை
வேலை கிடைக்குமா
என கேட்டால்?!
ஏன் வந்தாய்?
உன் பிரச்சனை தான் என்ன?
என பல வினாக்கள்?
நிதர்சன உண்மைகளும்
அரிதாரம் பூசிய
வார்த்தைக் கோர்வைகளும்
வாழ்வு தந்தது!
ஆறுமாத. விசா
தந்து
அகதியாக முகப்பிரதியில்
முத்திரை குத்தி
நாட்களை ஓட்டி
நான் அகதியே
வாதாடி!
பெற்ற இந்த வாழ்க்கை
நினைவு இருக்கின்றதா?
நாம் பெற்ற வரம் என்று
க.குமரன்
யேர்மனி