சந்தம் சிந்தும்
வாரம் 214
தீ
அனல் வளர்த்து
பூவை பாதம்
பதித்து
தொழும் தேவி
மனம் குளிர
வேண்டும் வரம்
கேட்டாள் !
காது அணி
எறிந்து
காணும் அம்புலி
காட்டியவளுக்கு
சீதை அக்கினி
பிரவேசமும்
பாண்டி நாட்டை
எரித்ததுவும்
பார் கண்ட
பின்னே..
கோதை வேண்டுதலுக்கு
பரிவாவள்
திரிபுர தேவி
க.குமரன்
யேர்மனி